தமிழ் இலக்கியம்Tamil Literature

தேடல்

பொருள் தேடல் — Search by meaning

சொல் தேடல் — Keyword search

"மழை" — 50 results

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 11காண்க →

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 12காண்க →

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 13காண்க →

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 14காண்க →

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 15காண்க →

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 16காண்க →

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 17காண்க →

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 18காண்க →

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 19காண்க →

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 20காண்க →

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 55காண்க →

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு.

ஒப்புரவறிதல் · குறள் 211காண்க →

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

வினைத்திட்பம் · குறள் 416காண்க →

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.

மன்னரைச் சேர்ந்தொழுதல் · குறள் 442காண்க →

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல் நோக்கி வாழுங் குடி.

செங்கோன்மை · குறள் 542காண்க →

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு.

செங்கோன்மை · குறள் 545காண்க →

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு.

கொடுங்கோன்மை · குறள் 557காண்க →

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.

கொடுங்கோன்மை · குறள் 559காண்க →

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

நாடு · குறள் 737காண்க →

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து.

பெரியாரைப் பிழையாமை · குறள் 898காண்க →

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறங்கூர்ந் தனையது உடைத்து.

நன்றியில்செல்வம் · குறள் 1010காண்க →

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்.

குடிசெயல்வகை · குறள் 1028காண்க →

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி.

தனிப்படர்மிகுதி · குறள் 1192காண்க →

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்.

பொழுதுகண்டிரங்கல் · குறள் 1239காண்க →

அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,

ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,

ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த

செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,

வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, . . . .

மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;

வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று

எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,

காலொடு பட்ட மாரி

மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே! . . . .

நற்றிணை · குறள் 1332காண்க →

நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,

அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,

குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்

நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,

பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி . . . .

தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,

அரிதே, காதலர்ப் பிரிதல்- இன்று செல்

இளையர்த் தரூஉம் வாடையொடு

மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.

நற்றிணை · குறள் 1335காண்க →

நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்

நார் உரித்தன்ன மதன் இல் மாமை,

குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,

திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு

எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, . . . .

'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது,

அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி

எறி மட மாற்கு வல்சி ஆகும்

வல் வில் ஓரி கானம் நாறி,

இரும் பல் ஒலிவரும் கூந்தல் . . . .

பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.

நற்றிணை · குறள் 1336காண்க →

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,

பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,

கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்

கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,

தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் . . . .

இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!

வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை

தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்

சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.

நற்றிணை · குறள் 1337காண்க →

அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,

பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,

திரு மணி புரையும் மேனி மடவோள்

யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!

துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் . . . .

அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்

தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்

கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்

திண் தேர்ப் பொறையன் தொண்டி-

தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! . . . .

நற்றிணை · குறள் 1338காண்க →

எழாஅஆகலின், எழில் நலம் தொலைய

அழாஅதீமோ, நொதுமலர் தலையே!-

ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த

பகழி அன்ன சேயரி மழைக் கண்,

நல்ல பெருந் தோளோயே! கொல்லன் . . . .

எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்

வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி

மயில் அறிபு அறியாமன்னோ;

பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே.

நற்றிணை · குறள் 1343காண்க →

புணரின் புணராது பொருளே; பொருள்வயிற்

பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்

செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு

உரியை- வாழி, என் நெஞ்சே!- பொருளே,

வாடாப் பூவின் பொய்கை நாப்பண் . . . .

ஓடு மீன் வழியின் கெடுவ; யானே,

விழுநீர் வியலகம் தூணிஆக

எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,

கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்

அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்; . . . .

எனைய ஆகுக! வாழிய பொருளே!

நற்றிணை · குறள் 1346காண்க →

நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,

மால் கடல் திரையின் இழிதரும் அருவி

அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி,

தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு

ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை, . . . .

'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என,

மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து,

உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து,

உரைத்தல் உய்ந்தனனே- தோழி!- சாரல்,

காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி . . . .

தீம் தொடை நரம்பின் இமிரும்

வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே.

நற்றிணை · குறள் 1347காண்க →

விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்

அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,

வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!

தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு

ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்- . . . .

உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன

அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்

காமரு தகைய கானவாரணம்

பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்

புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, . . . .

நாள் இரை கவர மாட்டி, தன்

பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!

நற்றிணை · குறள் 1351காண்க →

கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை

முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி

கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,

அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்

திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, . . . .

வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்

கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்

வந்தனன்; வாழி- தோழி!- உலகம்

கயம் கண் அற்ற பைது அறு காலை,

பீளொடு திரங்கிய நெல்லிற்கு . . . .

நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே.

நற்றிணை · குறள் 1352காண்க →

என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,

தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்.

அன்னை போல இனிய கூறியும்,

கள்வர் போலக் கொடியன்மாதோ-

மணி என இழிதரும் அருவி, பொன் என . . . .

வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து,

ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்

ஓடு மழை கிழிக்கும் சென்னி,

கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே!

நற்றிணை · குறள் 1358காண்க →

நின்ற வேனில் உலந்த காந்தள்

அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது,

ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென,

மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய,

புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி . . . .

யாங்கு வல்லுநள்கொல்தானே- யான், 'தன்

வனைந்து ஏந்து இள முலை நோவகொல்!' என

நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன்

பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ,

வெய்ய உயிர்க்கும் சாயல், . . . .

மை ஈர் ஓதி, பெரு மடத்தகையே?

நற்றிணை · குறள் 1359காண்க →

'படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை,

முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,

புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து,

கல்லுடைப் படுவில் கலுழி தந்து,

நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில், . . . .

துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர்

அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை,

இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல்

வல்லுவம்கொல்லோ, மெல்லியல்! நாம்?' என

விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி, . . . .

நல் அக வன முலைக் கரை சேர்பு

மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே.

நற்றிணை · குறள் 1363காண்க →

வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,

பாட்டம் பொய்யாது பரதவர் பகர,

இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்

ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு

மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் . . . .

புலம்பு ஆகின்றே- தோழி! கலங்கு நீர்க்

கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,

ஒலி காவோலை முள் மிடை வேலி,

பெண்ணை இவரும் ஆங்கண்

வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. . . . .

நற்றிணை · குறள் 1368காண்க →

மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்

அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய

பழ மழை பொழிந்த புது நீர் அவல

நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை

மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால், . . . .

'ஏகுமின்' என்ற இளையர் வல்லே

இல் புக்கு அறியுநராக, மெல்லென

மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ,

சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய

அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ . . . .

அவிழ் பூ முடியினள் கவைஇய

மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.

நற்றிணை · குறள் 1372காண்க →

பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,

நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்

குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,

மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய

நினக்கோ அறியுநள்- நெஞ்சே! புனத்த . . . .

நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்

கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல,

பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்,

குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய

பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து, . . . .

செல் மழை இயக்கம் காணும்

நல் மலை நாடன் காதல் மகளே?

நற்றிணை · குறள் 1374காண்க →

யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது

அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ?

எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?-

'வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,

ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள் . . . .

கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று

முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்

விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்;

தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி,

முனியாது ஆடப் பெறின், இவள் . . . .

பனியும் தீர்குவள், செல்க!' என்றோளே!

நற்றிணை · குறள் 1383காண்க →

கேளாய், எல்ல தோழி! அல்கல்

வேணவா நலிய, வெய்ய உயிரா,

ஏ மான் பிணையின் வருந்தினெனாக,

துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,

'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின், . . . .

சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,

'படு மழை பொழிந்த பாறை மருங்கில்

சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல்,

கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்

கண்ணும் படுமோ?' என்றிசின், யானே. . . . .

நற்றிணை · குறள் 1391காண்க →

'விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,

இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்

அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்' என-

குறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி,

பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம், . . . .

வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே;

'செல்க' என விடுநள்மன்கொல்லோ? எல் உமிழ்ந்து,

உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள்,

கொடி நுடங்கு இலங்கின மின்னி,

ஆடு மழை இறுத்தன்று, அவர் கோடு உயர் குன்றே. . . . .

நற்றிணை · குறள் 1398காண்க →

நயன் இன்மையின், பயன் இது என்னாது,

பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை,

பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது

தகாஅது- வாழியோ, குறுமகள்!- நகாஅது

உரைமதி; உடையும் என் உள்ளம்- சாரல் . . . .

கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்

பச்சூன் பெய்த பகழி போல,

சேயரி பரந்த மா இதழ் மழைக் கண்

உறாஅ நோக்கம் உற்ற என்

பைதல் நெஞ்சம் உய்யுமாறே. . . . .

நற்றிணை · குறள் 1405காண்க →

வருமழை கரந்த வால் நிற விசும்பின்

நுண் துளி மாறிய உலவை அம் காட்டு

ஆல நீழல் அசைவு நீக்கி,

அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,

வருந்தாது ஏகுமதி- வால் இழைக் குறுமகள்! . . . .

இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை

வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்

கானல் வார் மணல் மரீஇ,

கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே!

நற்றிணை · குறள் 1406காண்க →

ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,

வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்,

அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,

குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்

கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், . . . .

ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி

வாரற்கதில்ல- தோழி!- சாரல்

கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை,

தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு

காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் . . . .

ஓங்கு மலை நாடன், நின் நசையினானே!

நற்றிணை · குறள் 1415காண்க →

யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை?

வருந்தல்; வாழி!- தோழி!- யாம் சென்று

உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்

கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு

உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்- . . . .

தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,

நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது,

கண்ணீர் அருவியாக

அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே. . . . .

நற்றிணை · குறள் 1418காண்க →

கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர்,

திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,

நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை

அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,

இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் . . . .

அகல் இலை அகல வீசி, அகலாது

அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,

பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,

இன்னும் வருமே- தோழி!- வாரா

வன்கணாளரோடு இயைந்த . . . .

புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே!

நற்றிணை · குறள் 1419காண்க →

'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,

துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,

அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்

தாம் வரத் தௌத்த பருவம் காண்வர

இதுவோ?' என்றிசின்- மடந்தை!- மதி இன்று, . . . .

மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை

பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல்

கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல-

பிடவமும், கொன்றையும் கோடலும்-

மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. . . . .

நற்றிணை · குறள் 1429காண்க →

விருந்து எவன்செய்கோ- தோழி!- சாரல்

அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்

சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,

உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்

பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி, . . . .

மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்

தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,

மலை இமைப்பது போல் மின்னி,

சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?

நற்றிணை · குறள் 1442காண்க →