நூல்கள்›நற்றிணை›பாடல் 1391

பாடல் 1391

சிறுமோலிகனார்

கேளாய், எல்ல தோழி! அல்கல்

வேணவா நலிய, வெய்ய உயிரா,

ஏ மான் பிணையின் வருந்தினெனாக,

துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,

'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின், . . . .

சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,

'படு மழை பொழிந்த பாறை மருங்கில்

சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல்,

கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்

கண்ணும் படுமோ?' என்றிசின், யானே. . . . .

குறிஞ்சி

← பாடல் 1390பாடல் 1392 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்