நூல்கள்›நற்றிணை›பாடல் 1405

பாடல் 1405

மாமூலனார்

நயன் இன்மையின், பயன் இது என்னாது,

பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை,

பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது

தகாஅது- வாழியோ, குறுமகள்!- நகாஅது

உரைமதி; உடையும் என் உள்ளம்- சாரல் . . . .

கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்

பச்சூன் பெய்த பகழி போல,

சேயரி பரந்த மா இதழ் மழைக் கண்

உறாஅ நோக்கம் உற்ற என்

பைதல் நெஞ்சம் உய்யுமாறே. . . . .

குறிஞ்சி

← பாடல் 1404பாடல் 1406 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்