நூல்கள்›நற்றிணை›பாடல் 1406

பாடல் 1406

அம்மூவனார்

வருமழை கரந்த வால் நிற விசும்பின்

நுண் துளி மாறிய உலவை அம் காட்டு

ஆல நீழல் அசைவு நீக்கி,

அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,

வருந்தாது ஏகுமதி- வால் இழைக் குறுமகள்! . . . .

இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை

வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்

கானல் வார் மணல் மரீஇ,

கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே!

பாலை

← பாடல் 1405பாடல் 1407 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்