பாடல் 1407
கபிலர்
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்றுமன்னே- நெஞ்சே!- செவ் வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் . . . .
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், . . . .
திதலை அல்குல், குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே.
குறிஞ்சி