நூல்கள்›நற்றிணை›பாடல் 1418

பாடல் 1418

நல்லந்துவனார்

யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை?

வருந்தல்; வாழி!- தோழி!- யாம் சென்று

உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்

கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு

உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்- . . . .

தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,

நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது,

கண்ணீர் அருவியாக

அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே. . . . .

குறிஞ்சி

← பாடல் 1417பாடல் 1419 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்