நூல்கள்›நற்றிணை›பாடல் 1398

பாடல் 1398

பிரான்

'விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,

இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்

அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்' என-

குறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி,

பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம், . . . .

வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே;

'செல்க' என விடுநள்மன்கொல்லோ? எல் உமிழ்ந்து,

உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள்,

கொடி நுடங்கு இலங்கின மின்னி,

ஆடு மழை இறுத்தன்று, அவர் கோடு உயர் குன்றே. . . . .

குறிஞ்சி

← பாடல் 1397பாடல் 1399 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்