நூல்கள்›நற்றிணை›பாடல் 1442

பாடல் 1442

பெருங்குன்றூர்

விருந்து எவன்செய்கோ- தோழி!- சாரல்

அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்

சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,

உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்

பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி, . . . .

மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்

தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,

மலை இமைப்பது போல் மின்னி,

சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?

குறிஞ்சி

← பாடல் 1441பாடல் 1443 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்