நூல்கள்›நற்றிணை›பாடல் 1383

பாடல் 1383

நல்வேட்டனார்

யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது

அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ?

எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?-

'வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,

ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள் . . . .

கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று

முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்

விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்;

தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி,

முனியாது ஆடப் பெறின், இவள் . . . .

பனியும் தீர்குவள், செல்க!' என்றோளே!

குறிஞ்சி

← பாடல் 1382பாடல் 1384 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்