நூல்கள்›நற்றிணை›பாடல் 1384

பாடல் 1384

சேந்தங் கண்ணனார்

வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,

வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை

இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து-

கருங் கால் வெண் குருகு!- எனவ கேண்மதி:

பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை; . . . .

அது நீ அறியின், அன்புமார் உடையை;

நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை

இற்றாங்கு உணர உரைமதி- தழையோர்

கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்

தெண் திரை மணிப் புறம் தைவரும் . . . .

கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே!

நெய்தல்

← பாடல் 1383பாடல் 1385 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்