நூல்கள்›நற்றிணை›பாடல் 1382

பாடல் 1382

பாலத்தனார்

மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்

தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்

மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள்

சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி,

வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்; . . . .

நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும்

பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே;

அன்பு இலை; வாழி, என் நெஞ்சே! வெம் போர்

மழவர் பெரு மகன் மா வள் ஓரி

கை வளம் இயைவது ஆயினும், . . . .

ஐது ஏகு அம்ம, இயைந்து செய் பொருளே.

பாலை

← பாடல் 1381பாடல் 1383 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்