நூல்கள்›நற்றிணை›பாடல் 1381

பாடல் 1381

பேராலவாயர்

யாங்குச் செய்வாம்கொல்- தோழி! ஓங்கு கழைக்

காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று

ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்

கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்

பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு . . . .

மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,

பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே;

பெருந் தண் குளவி குழைத்த பா அடி,

இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு

பேதை ஆசினி ஒசித்த . . . .

வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே?

குறிஞ்சி

← பாடல் 1380பாடல் 1382 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்