நூல்கள்›நற்றிணை›பாடல் 1380

பாடல் 1380

மருதம் பாடிய இளங்கடுங்கோ

அறியாமையின், அன்னை! அஞ்சி,

குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்

விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,

நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை

நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின், . . . .

'கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று' என,

'யாணது பசலை' என்றனன்; அதன் எதிர்,

'நாண் இலை, எலுவ!' என்று வந்திசினே-

செறுநரும் விழையும் செம்மலோன் என,

நறு நுதல் அரிவை! போற்றேன், . . . .

சிறுமை பெருமையின் காணாது துணிந்தே.

மருதம்

← பாடல் 1379பாடல் 1381 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்