நூல்கள்›நற்றிணை›பாடல் 1374

பாடல் 1374

பெருங்கௌசிகனார்

பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,

நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்

குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,

மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய

நினக்கோ அறியுநள்- நெஞ்சே! புனத்த . . . .

நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்

கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல,

பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்,

குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய

பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து, . . . .

செல் மழை இயக்கம் காணும்

நல் மலை நாடன் காதல் மகளே?

குறிஞ்சி

← பாடல் 1373பாடல் 1375 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்