நூல்கள்›நற்றிணை›பாடல் 1375

பாடல் 1375

ஆசிரியர் அறியப்படவில்லை

இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,

நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு

மீன் எறி பரதவர் மகளே; நீயே,

நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்

கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே: . . . .

நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி,

இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?

புலவு நாறுதும்; செல நின்றீமோ!

பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை

நும்மொடு புரைவதோ அன்றே; . . . .

எம்மனோரில் செம்மலும் உடைத்தே!

நெய்தல்

← பாடல் 1374பாடல் 1376 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்