நூல்கள்›நற்றிணை›பாடல் 1373

பாடல் 1373

எயினந்தையார்

துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின்

என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,

ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி

ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு

அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் . . . .

வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே

மெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே,

அஞ்சல் என்ற இறை கைவிட்டென,

பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்,

களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் . . . .

ஓர் எயின் மன்னன் போல,

அழிவு வந்தன்றால், ஒழிதல் கேட்டே.

பாலை

← பாடல் 1372பாடல் 1374 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்