நூல்கள்›நற்றிணை›பாடல் 1368

பாடல் 1368

உலோச்சனார்

வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,

பாட்டம் பொய்யாது பரதவர் பகர,

இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்

ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு

மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் . . . .

புலம்பு ஆகின்றே- தோழி! கலங்கு நீர்க்

கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,

ஒலி காவோலை முள் மிடை வேலி,

பெண்ணை இவரும் ஆங்கண்

வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. . . . .

நெய்தல்

← பாடல் 1367பாடல் 1369 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்