நூல்கள்›நற்றிணை›பாடல் 1369

பாடல் 1369

மருதன் இளநாகனார்

சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின்

திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென;

காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?

கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்

புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் . . . .

தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின்

கண்ணே கதவ? அல்ல; நண்ணார்

அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு,

ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன்

பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் . . . .

கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே.

குறிஞ்சி

← பாடல் 1368பாடல் 1370 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்