நூல்கள்›நற்றிணை›பாடல் 1370

பாடல் 1370

கோண்மா நெடுங்கோட்டனார்

நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட,

குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்,

பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார்,

திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப,

வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் . . . .

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்

பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்

சீர்கெழு மடந்தை ஈர்- இமை பொருந்த,

நள்ளென் கங்குல், கள்வன் போல, . . . .

அகன் துறை ஊரனும் வந்தனன்-

சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே.

மருதம்

← பாடல் 1369பாடல் 1371 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்