பாடல் 1367
பேரி சாத்தனார்
பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை,
உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தௌ மணி
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று
இவளொடும் செலினோ நன்றே; குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ, . . . .
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம்
ஆகுவது அன்று, இவள் அவலம்- நாகத்து
அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு,
ஆர்கலி நல் ஏறு திரிதரும் . . . .
கார் செய் மாலை வரூஉம் போழ்தே.
பாலை