தமிழ் இலக்கியம்Tamil Literature

தேடல்

பொருள் தேடல் — Search by meaning

சொல் தேடல் — Keyword search

"இயற்கை" — 50 results

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

இல்வாழ்க்கை · குறள் 1காண்க →

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

இல்வாழ்க்கை · குறள் 9காண்க →

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

இல்வாழ்க்கை · குறள் 41காண்க →

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.

நடுவு நிலைமை · குறள் 115காண்க →

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.

ஒப்புரவறிதல் · குறள் 218காண்க →

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா.

அவாவறுத்தல் · குறள் 366காண்க →

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.

அவாவறுத்தல் · குறள் 370காண்க →

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி.

ஊழ் · குறள் 371காண்க →

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

ஆகலூழ் உற்றக் கடை.

ஊழ் · குறள் 372காண்க →

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை யறிவே மிகும்.

ஊழ் · குறள் 373காண்க →

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.

ஊழ் · குறள் 374காண்க →

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு.

ஊழ் · குறள் 375காண்க →

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்.

ஊழ் · குறள் 380காண்க →

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்.

வினைத்தூய்மை · குறள் 404காண்க →

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.

வினைத்தூய்மை · குறள் 405காண்க →

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

வினைத்திட்பம் · குறள் 418காண்க →

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் சொல்.

குறிப்பறிதல் · குறள் 453காண்க →

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.

குறிப்பறிதல் · குறள் 455காண்க →

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும்.

சுற்றந்தழால் · குறள் 529காண்க →

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

ஊக்கமுடைமை · குறள் 596காண்க →

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன்நிற் பவை.

அமைச்சு · குறள் 636காண்க →

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்.

அமைச்சு · குறள் 637காண்க →

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு.

தூது · குறள் 684காண்க →

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு.

நாடு · குறள் 739காண்க →

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்.

அரண் · குறள் 742காண்க →

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.

படைச்செருக்கு · குறள் 781காண்க →

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

பகைத்திறந்தெரிதல் · குறள் 871காண்க →

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்

மாண்ட அறிவி னவர்.

வரைவின்மகளிர் · குறள் 915காண்க →

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்.

மருந்து · குறள் 946காண்க →

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நாணும் ஒருங்கு.

குடிமை · குறள் 951காண்க →

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்

சீரல் லவர்கண் படின்.

பெருமை · குறள் 977காண்க →

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.

குடிசெயல்வகை · குறள் 1022காண்க →

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.

குடிசெயல்வகை · குறள் 1023காண்க →

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்.

நல்குரவு · குறள் 1047காண்க →

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ ஏதில தந்து.

தகையணங்குறுத்தல் · குறள் 1089காண்க →

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.

புணர்ச்சிமகிழ்தல் · குறள் 1101காண்க →

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து.

புணர்ச்சிமகிழ்தல் · குறள் 1102காண்க →

வேட் ட பொழுதின் அவையவை போலுமே

தோட் டார் கதுப்பினாள் தோள்.

புணர்ச்சிமகிழ்தல் · குறள் 1105காண்க →

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்.

நலம்புனைந்துரைத்தல் · குறள் 1111காண்க →

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று.

நலம்புனைந்துரைத்தல் · குறள் 1112காண்க →

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்.

காதற்சிறப்புரைத்தல் · குறள் 1121காண்க →

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்.

பொழுதுகண்டிரங்கல் · குறள் 1234காண்க →

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்.

பொழுதுகண்டிரங்கல் · குறள் 1235காண்க →

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு.

புலவி நுணுக்கம் · குறள் 1311காண்க →

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.

புலவி நுணுக்கம் · குறள் 1317காண்க →

'இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய்,

புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை,

புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,

பொம்மற் படு திரை நம்மோடு ஆடி,

புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் . . . .

துவரினர் அருளிய துறையே; அதுவே,

கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல்

அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ,

தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு

உள்ளுதோறு உள்ளுதோறு உருகி, . . . .

பைஇப் பையப் பசந்தனை பசப்பே.

நற்றிணை · குறள் 1426காண்க →

படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்

கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை,

ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்

மெல் விரல் மோசை போல, காந்தள்

வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! . . . .

'நன்றி விளைவும் தீதொடு வரும்' என,

அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத்

தேம் முதிர் சிலம்பில் தடைஇய

வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே.

நற்றிணை · குறள் 1518காண்க →

'மலை உறை குறவன் காதல் மட மகள்,

பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;

சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்

உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும்,

செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் . . . .

தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,

அவ் வெள் அருவிக் குட வரையகத்து,

கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,

உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,

பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின் . . . .

மாயா இயற்கைப் பாவையின்,

போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.

நற்றிணை · குறள் 1531காண்க →

மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;

உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்

பொன்னும் கொள்ளார், மன்னர் - நன்னுதல்!

நாம் தம் உண்மையின் உளமே; அதனால்

தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, . . . .

என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,

சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்

இன்ன நிலைமைத்து என்ப;

என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.

நற்றிணை · குறள் 1556காண்க →

இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ

'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,

நாளும்நாள் உடன் கவவவும், தோளே

தொல் நிலை வழீஇய நின் தொடி' எனப் பல் மாண்

உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை . . . .

ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி

இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி,

தலைநாள் அன்ன பேணலன், பல நாள்,

ஆர் இருள் வருதல் காண்பேற்கு,

யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே? . . . .

நற்றிணை · குறள் 1662காண்க →