நூல்கள்›நற்றிணை›பாடல் 1518

பாடல் 1518

அவ்வையார்

படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்

கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை,

ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்

மெல் விரல் மோசை போல, காந்தள்

வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! . . . .

'நன்றி விளைவும் தீதொடு வரும்' என,

அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத்

தேம் முதிர் சிலம்பில் தடைஇய

வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே.

குறிஞ்சி

← பாடல் 1517பாடல் 1519 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்