பாடல் 1519
ஆசிரியர் அறியப்படவில்லை
தம் அலது இல்லா நம் நயந்து அருளி
இன்னும் வாரார்; ஆயினும், சென்னியர்,
தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ்
நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின்
கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- . . . .
எவ் வினை செய்வர்கொல் தாமே?- வெவ் வினைக்
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கானப் புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம்,
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே? . . . .
பாலை