நூல்கள்›நற்றிணை›பாடல் 1531

பாடல் 1531

பரணர்

'மலை உறை குறவன் காதல் மட மகள்,

பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;

சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்

உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும்,

செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் . . . .

தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,

அவ் வெள் அருவிக் குட வரையகத்து,

கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,

உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,

பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின் . . . .

மாயா இயற்கைப் பாவையின்,

போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.

குறிஞ்சி

← பாடல் 1530பாடல் 1532 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்