நூல்கள்›நற்றிணை›பாடல் 1662

பாடல் 1662

குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்

இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ

'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,

நாளும்நாள் உடன் கவவவும், தோளே

தொல் நிலை வழீஇய நின் தொடி' எனப் பல் மாண்

உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை . . . .

ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி

இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி,

தலைநாள் அன்ன பேணலன், பல நாள்,

ஆர் இருள் வருதல் காண்பேற்கு,

யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே? . . . .

குறிஞ்சி

← பாடல் 1661பாடல் 1663 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்