நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›நிலையாமை

10.நிலையாமை

10 குறள்கள்

331விளக்கம் →

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

332விளக்கம் →

கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.

333விளக்கம் →

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்.

334விளக்கம் →

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்.

335விளக்கம் →

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்

336விளக்கம் →

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.

337விளக்கம் →

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல.

338விளக்கம் →

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு.

339விளக்கம் →

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

340விளக்கம் →

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.

← கொல்லாமைதுறவு →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்