நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›கொல்லாமை

9.கொல்லாமை

10 குறள்கள்

321விளக்கம் →

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும்.

322விளக்கம் →

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

323விளக்கம் →

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று.

324விளக்கம் →

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி.

325விளக்கம் →

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை.

326விளக்கம் →

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லாது உயிருண்ணுங் கூற்று.

327விளக்கம் →

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை.

328விளக்கம் →

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க் குக்

கொன்றாகும் ஆக்கங் கடை.

329விளக்கம் →

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவா ரகத்து.

330விளக்கம் →

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

← இன்னாசெய்யாமைநிலையாமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்