நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›இன்னாசெய்யாமை

8.இன்னாசெய்யாமை

10 குறள்கள்

311விளக்கம் →

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

312விளக்கம் →

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

313விளக்கம் →

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும்.

314விளக்கம் →

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

315விளக்கம் →

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.

316விளக்கம் →

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்.

317விளக்கம் →

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.

318விளக்கம் →

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.

319விளக்கம் →

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும்.

320விளக்கம் →

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.

← வெகுளாமைகொல்லாமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்