நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›வெகுளாமை

7.வெகுளாமை

10 குறள்கள்

301விளக்கம் →

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்?

302விளக்கம் →

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற.

303விளக்கம் →

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்.

304விளக்கம் →

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.

305விளக்கம் →

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.

306விளக்கம் →

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.

307விளக்கம் →

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

308விளக்கம் →

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று.

309விளக்கம் →

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்.

310விளக்கம் →

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.

← வாய்மைஇன்னாசெய்யாமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்