நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›வாய்மை

6.வாய்மை

10 குறள்கள்

291விளக்கம் →

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

292விளக்கம் →

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.

293விளக்கம் →

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

294விளக்கம் →

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்.

295விளக்கம் →

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை.

296விளக்கம் →

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமுந் தரும்.

297விளக்கம் →

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

298விளக்கம் →

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

299விளக்கம் →

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

300விளக்கம் →

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

← கள்ளாமைவெகுளாமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்