நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›கள்ளாமை

5.கள்ளாமை

10 குறள்கள்

281விளக்கம் →

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

282விளக்கம் →

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.

283விளக்கம் →

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.

284விளக்கம் →

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.

285விளக்கம் →

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

286விளக்கம் →

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்.

287விளக்கம் →

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

288விளக்கம் →

அளவறாந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்

களவறிந்தார் நெஞ்சில் கரவு.

289விளக்கம் →

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.

290விளக்கம் →

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்

தள்ளாது புத்தே ளுளகு.

← கூடாவொழுக்கம்வாய்மை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்