நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›கூடாவொழுக்கம்

4.கூடாவொழுக்கம்

10 குறள்கள்

271விளக்கம் →

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

272விளக்கம் →

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

தான்அறி குற்றப் படின்.

273விளக்கம் →

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

274விளக்கம் →

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

275விளக்கம் →

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

ஏதம் பலவுந் தரும்.

276விளக்கம் →

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

277விளக்கம் →

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

முக்கிற் கரியார் உடைத்து.

278விளக்கம் →

மனத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.

279விளக்கம் →

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்.

280விளக்கம் →

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்.

← தவம்கள்ளாமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்