நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›துறவு

11.துறவு

10 குறள்கள்

341விளக்கம் →

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

342விளக்கம் →

வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டுஇயற் பால பல.

343விளக்கம் →

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

344விளக்கம் →

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை

மயலாகும் மற்றும் பெயர்த்து.

345விளக்கம் →

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை.

346விளக்கம் →

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.

347விளக்கம் →

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர் க்கு.

348விளக்கம் →

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்.

349விளக்கம் →

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்.

350விளக்கம் →

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.

← நிலையாமைமெய்யுணர்தல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்