நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›மெய்யுணர்தல்

12.மெய்யுணர்தல்

10 குறள்கள்

351விளக்கம் →

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.

352விளக்கம் →

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.

353விளக்கம் →

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து.

354விளக்கம் →

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

355விளக்கம் →

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

356விளக்கம் →

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.

357விளக்கம் →

ஓர்த்துள்ளம் உள்ளது உணரான் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

358விளக்கம் →

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு.

359விளக்கம் →

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்.

360விளக்கம் →

காமம் வெகுளி மயக்கம் இநவ்முன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்.

← துறவுஅவாவறுத்தல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்