நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›அவாவறுத்தல்

13.அவாவறுத்தல்

10 குறள்கள்

361விளக்கம் →

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து.

362விளக்கம் →

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.

363விளக்கம் →

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

ஆண்டும் அஃதொப்பது இல்.

364விளக்கம் →

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.

365விளக்கம் →

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

அற்றாக அற்றது இலர்.

366விளக்கம் →

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா.

367விளக்கம் →

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

தான்வேண்டு மாற்றான் வரும்.

368விளக்கம் →

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும்.

369விளக்கம் →

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

370விளக்கம் →

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.

← மெய்யுணர்தல்
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்