நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›நினைந்தவர்புலம்பல்

6.நினைந்தவர்புலம்பல்

10 குறள்கள்

1201விளக்கம் →

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.

1202விளக்கம் →

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன்று ஏல்.

1203விளக்கம் →

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும்.

1204விளக்கம் →

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து

ஓஒ உளரே அவர்.

1205விளக்கம் →

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்நெஞ்சத்து ஓவா வரல்.

1206விளக்கம் →

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்

உற்றநாள் உள்ள உளேன்.

1207விளக்கம் →

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்.

1208விளக்கம் →

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு.

1209விளக்கம் →

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

அளியின்மை ஆற்ற நினைந்து.

1210விளக்கம் →

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

படாஅதி வாழி மதி.

← தனிப்படர்மிகுதிகனவுநிலையுரைத்தல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்