நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›கனவுநிலையுரைத்தல்

7.கனவுநிலையுரைத்தல்

10 குறள்கள்

1211விளக்கம் →

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து.

1212விளக்கம் →

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன்.

1213விளக்கம் →

நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.

1214விளக்கம் →

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு.

1215விளக்கம் →

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது.

1216விளக்கம் →

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

காதலர் நீங்கலர் மன்.

1217விளக்கம் →

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்

என்எம்மைப் பீழிப் பது.

1218விளக்கம் →

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

1219விளக்கம் →

நனவினால் நல்காரை நோவர் கனவினால்

காதலர்க் காணா தவர்.

1220விளக்கம் →

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

காணார்கொல் இவ்வூ ரவர்.

← நினைந்தவர்புலம்பல்பொழுதுகண்டிரங்கல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்