நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›பொழுதுகண்டிரங்கல்

8.பொழுதுகண்டிரங்கல்

20 குறள்கள்

1221விளக்கம் →

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது.

1231விளக்கம் →

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி

நறுமலர் நாணின கண்.

1222விளக்கம் →

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை.

1232விளக்கம் →

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாரும் கண்.

1223விளக்கம் →

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்

துன்பம் வளர வரும்.

1233விளக்கம் →

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்.

1224விளக்கம் →

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும்.

1234விளக்கம் →

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்.

1225விளக்கம் →

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை?

1235விளக்கம் →

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்.

1226விளக்கம் →

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்த திலேன்.

1236விளக்கம் →

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்

கொடியர் எனக்கூறல் நொந்து.

1227விளக்கம் →

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்.

1237விளக்கம் →

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோட் பூசல் உரைத்து.

1228விளக்கம் →

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை.

1238விளக்கம் →

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல்.

1229விளக்கம் →

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து.

1239விளக்கம் →

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்.

1230விளக்கம் →

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர்.

1240விளக்கம் →

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு.

← கனவுநிலையுரைத்தல்நெஞ்சொடுகிளத்தல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்