நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›நெஞ்சொடுகிளத்தல்

10.நெஞ்சொடுகிளத்தல்

10 குறள்கள்

1241விளக்கம் →

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

1242விளக்கம் →

காதல் அவரிலர் ஆகநீ நோவது

பேதைமை வாழியென் நெஞ்சு.

1243விளக்கம் →

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்

பைதல்நோய் செய்தார்கண் இல்.

1244விளக்கம் →

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்

தின்னும் அவர்க்காணல் உற்று.

1245விளக்கம் →

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர்.

1246விளக்கம் →

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்

பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

1247விளக்கம் →

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே

யானோ பொறேன்இவ் விரண்டு.

1248விளக்கம் →

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்

பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

1249விளக்கம் →

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ

யாருழைச் சேறியென் நெஞ்சு.

1250விளக்கம் →

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

இன்னும் இழத்தும் கவின்.

← பொழுதுகண்டிரங்கல்நிறையழிதல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்