நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›நிறையழிதல்

11.நிறையழிதல்

10 குறள்கள்

1251விளக்கம் →

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

1252விளக்கம் →

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை

யாமத்தும் ஆளும் தொழில்.

1253விளக்கம் →

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்

தும்மல்போல் தோன்றி விடும்.

1254விளக்கம் →

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்

மறையிறந்து மன்று படும்.

1255விளக்கம் →

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்

உற்றார் அறிவதொன்று அன்று.

1256விளக்கம் →

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ

எற்றென்னை உற்ற துயர்.

1257விளக்கம் →

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்

பேணியார் பெட்ப செயின்.

1258விளக்கம் →

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்

பெண்மை உடைக்கும் படை.

1259விளக்கம் →

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம்

கலத்தல் உறுவது கண்டு.

1260விளக்கம் →

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ

புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

← நெஞ்சொடுகிளத்தல்அவர்வயின்விதும்பல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்