நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›அவர்வயின்விதும்பல்

12.அவர்வயின்விதும்பல்

10 குறள்கள்

1261விளக்கம் →

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.

1262விளக்கம் →

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்

கலங்கழியும் காரிகை நீத்து.

1263விளக்கம் →

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

வரல்நசைஇ இன்னும் உளேன்.

1264விளக்கம் →

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

கோடுகொ டேறுமென் நெஞ்சு.

1265விளக்கம் →

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்

நீங்கும்என் மென்தோள் பசப்பு.

1266விளக்கம் →

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்

பைதல்நோய் எல்லாம் கெட.

1267விளக்கம் →

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

கண்அன்ன கேளிர் விரன்.

1268விளக்கம் →

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து.

1269விளக்கம் →

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

1270விளக்கம் →

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்

உள்ளம் உடைந்துக்கக் கால்.

← நிறையழிதல்குறிப்பறிவுறுத்தல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்