நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›குறிப்பறிவுறுத்தல்

13.குறிப்பறிவுறுத்தல்

10 குறள்கள்

1271விளக்கம் →

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்

உரைக்கல் உறுவதொன் றுண்டு.

1272விளக்கம் →

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்நிறைந்த நீர்மை பெரிது.

1273விளக்கம் →

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு.

1274விளக்கம் →

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

1275விளக்கம் →

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்

தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

1276விளக்கம் →

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி

அன்பின்மை சூழ்வ துடைத்து.

1277விளக்கம் →

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை.

1278விளக்கம் →

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்

எழுநாளேம் மேனி பசந்து.

1279விளக்கம் →

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

அஃதாண் டவள்செய் தது.

1280விளக்கம் →

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு.

← அவர்வயின்விதும்பல்புணர்ச்சிவிதும்பல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்