நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›புணர்ச்சிவிதும்பல்

14.புணர்ச்சிவிதும்பல்

10 குறள்கள்

1281விளக்கம் →

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

1282விளக்கம் →

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்

காமம் நிறைய வரின்.

1283விளக்கம் →

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

காணா தமையல கண்.

1284விளக்கம் →

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

கூடற்கண் சென்றது என் னெஞ்சு.

1285விளக்கம் →

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட இடத்து.

1286விளக்கம் →

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறல் லவை.

1287விளக்கம் →

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

பொய்த்தல் அறிந்தென் புலந்து.

1288விளக்கம் →

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

கள்ளற்றே கள்வநின் மார்பு.

1289விளக்கம் →

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார்.

1290விளக்கம் →

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்

என்னினும் தான்விதுப் புற்று.

← குறிப்பறிவுறுத்தல்நெஞ்சொடுபுலத்தல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்