நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›நெஞ்சொடுபுலத்தல்

15.நெஞ்சொடுபுலத்தல்

10 குறள்கள்

1291விளக்கம் →

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா தது.

1292விளக்கம் →

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

1293விளக்கம் →

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங்கு அவர்பின் செலல்.

1294விளக்கம் →

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

1295விளக்கம் →

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

1296விளக்கம் →

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததென் நெஞ்சு.

1297விளக்கம் →

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

மாணா மடநெஞ்சிற் பட்டு.

1298விளக்கம் →

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

1299விளக்கம் →

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சந் துணையல் வழி.

1300விளக்கம் →

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.

← புணர்ச்சிவிதும்பல்புலவி →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்