நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›புலவி

16.புலவி

10 குறள்கள்

1301விளக்கம் →

புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்

அல்லல்நோய் காண்கம் சிறிது.

1302விளக்கம் →

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.

1303விளக்கம் →

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல்.

1304விளக்கம் →

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று.

1305விளக்கம் →

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை

பூஅன்ன கண்ணார் அகத்து.

1306விளக்கம் →

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று.

1307விளக்கம் →

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்று கொல் என்று.

1308விளக்கம் →

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்

காதலர் இல்லா வழி.

1309விளக்கம் →

நீரும் நிழலது இனிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது.

1310விளக்கம் →

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்

கூடுவேம் என்பது அவா.

← நெஞ்சொடுபுலத்தல்புலவி நுணுக்கம் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்