நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›புலவி நுணுக்கம்

17.புலவி நுணுக்கம்

10 குறள்கள்

1311விளக்கம் →

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு.

1312விளக்கம் →

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து.

1313விளக்கம் →

கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று.

1314விளக்கம் →

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.

1315விளக்கம் →

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள்.

1316விளக்கம் →

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.

1317விளக்கம் →

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.

1318விளக்கம் →

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று.

1319விளக்கம் →

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

இந்நீரர் ஆகுதிர் என்று.

1320விளக்கம் →

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யாருள்ளி நோக்கினீர் என்று.

← புலவிஊடலுவகை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்