நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›ஊடலுவகை

18.ஊடலுவகை

10 குறள்கள்

1321விளக்கம் →

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்லது அவர்அளிக்கு மாறு.

1322விளக்கம் →

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி

வாடினும் பாடு பெறும்.

1323விளக்கம் →

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னார் அகத்து.

1324விளக்கம் →

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை.

1325விளக்கம் →

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து.

1326விளக்கம் →

உணலினும் உண்டது அறல்இனிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது.

1327விளக்கம் →

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும்.

1328விளக்கம் →

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு.

1329விளக்கம் →

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா.

1330விளக்கம் →

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.

← புலவி நுணுக்கம்
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்