நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›தனிப்படர்மிகுதி

5.தனிப்படர்மிகுதி

10 குறள்கள்

1191விளக்கம் →

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி.

1192விளக்கம் →

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி.

1193விளக்கம் →

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே

வாழுநம் என்னும் செருக்கு.

1194விளக்கம் →

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்

வீழப் படாஅர் எனின்.

1195விளக்கம் →

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை.

1196விளக்கம் →

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல

இருதலை யானும் இனிது.

1197விளக்கம் →

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகு வான்.

1198விளக்கம் →

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

1199விளக்கம் →

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு

இசையும் இனிய செவிக்கு.

1200விளக்கம் →

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்

செறாஅஅய் வாழிய நெஞ்சு.

← பசப்புறுபருவரல்நினைந்தவர்புலம்பல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்