நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›பசப்புறுபருவரல்

4.பசப்புறுபருவரல்

10 குறள்கள்

1181விளக்கம் →

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண்பியார்க்கு உரைக்கோ பிற.

1182விளக்கம் →

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு.

1183விளக்கம் →

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து.

1184விளக்கம் →

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு.

1185விளக்கம் →

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

மேனி பசப்பூர் வது.

1186விளக்கம் →

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

1187விளக்கம் →

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

1188விளக்கம் →

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்

துறந்தார் அவர்என்பார் இல்.

1189விளக்கம் →

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலையர் ஆவர் எனின்.

1190விளக்கம் →

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

நல்காமை தூற்றார் எனின்.

← கண்விதுப்பழிதல்தனிப்படர்மிகுதி →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்