நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›நன்றியில்செல்வம்

6.நன்றியில்செல்வம்

10 குறள்கள்

1001விளக்கம் →

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்.

1002விளக்கம் →

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு

1003விளக்கம் →

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை.

1004விளக்கம் →

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன்.

1005விளக்கம் →

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடியுண் டாயினும் இல்.

1006விளக்கம் →

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று

ஈதல் இயல்பிலா தான்.

1007விளக்கம் →

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று.

1008விளக்கம் →

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று.

1009விளக்கம் →

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர்.

1010விளக்கம் →

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறங்கூர்ந் தனையது உடைத்து.

← பண்புடைமைநாணுடைமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்